ரெட்டி சகோதரர்கள் மீது புகார் கொடுத்த சுரங்க உரிமையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது சரமாரி தாக்குதல
பெல்லாரி: கர்நாடகத்தின் அதிக சக்தி வாய்ந்த நபர்களான ரெட்டி சகோதரர்களின் சுரங்க விதி மீறல்கள் குறித்துப் புகார் கூறிய சுரங்க உரிமையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது ரெட்டி சகோதரர்கள் அனுப்பிடய அடியாட்கள் சரமாரி கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் அமைச்சர்களாக உள்ள ஜனரார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி சகோதரர்கள் வைத்ததுதான் கர்நாடக அரசியலில் சட்டம் என்றாகி விட்டது.
சமீபத்தில் முதல்வர் எதியூரப்பாவையே தூக்க முயற்சித்தனர் இந்த சகோதரர்கள். ஆனால் கடுமையாகப் போராடி பதவியைக் காப்பாற்றிக் கொண்டு விட்டார் எதியூரப்பா.
இந்த சர்ச்சையிலிருந்து ரெட்டி சகோதரர்கள் விடுபட்ட நிலையில், அடுத்து அவர்களுக்குச் சொந்தமான ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரானைட் சுரங்கம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.
ரெட்டி சகோரர்களின் சட்ட மீறல், ஆக்கிரமிப்பு குறித்து டிஎன்ஆர் மைனிங் நிறுவனத்தின் உரிமையாளர்களான தப்பல் கணேஷ் மற்றும் அவரது இரு சகோதரர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ரெட்டி சகோதரர்கள் ஆக்கிரமித்துள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய நிலஅளவைத் துறை தலைமையில் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இக்குழுவினரை வரவேற்பதற்காக தப்பல் கணேஷ் சகோதரர்களும் பத்திரிகையாளர்களும் பெல்லாரியில் ஒரு ஹோட்டல் அருகே காத்திருந்தனர். அப்போது அங்கு 8 பேர் கொண்ட கும்பல் வந்து அங்கிருந்தவர்களை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகாகத் தாக்கினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications