முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நுழைந்தால் கண்டதும் சுட உத்தரவு
விக்கிரமசிங்கபுரம் (நெல்லை) களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நுழைந்தால் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளதாக காப்பக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், கோடை கால வறட்சி காரணமாக வனப்பகுதிகளில் தீப்பிடிக்காமல் தடுப்பதற்காக களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் ஏப் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மூடப்படுகிறது.
ஆனால் சுற்றுலா தலமான அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், களக்காடு தலையணை பகுதி, நம்பி கோயில் ஆகிய இடங்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் முன்னேச்சரிக்கை மற்றும் தீவிர கட்டுபாட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள்.
மாஞ்சோலை, செங்கல்தேரி ஆகிய இடங்களுக்கு அனுமதியில்லை. தீத்தடுப்பு ரோந்து பணியினர் 24 மணி நேரமும் சம்பந்தப்பட்ட வனப்பகுதியை பாதுகாத்து வருவார்கள். தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் பொதுமக்கள் நுழைந்தால் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் சென்று வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நாளை ஒருநாள் மட்டும் முண்டந்துறையில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் 120 வனப்பணியாளர்கள் ஈடுபடுகின்றனர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications