பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!
தர்மபுரி: பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்ற புத்தகத்தைப் படிக்க வாங்கிய சாமியார் அதைத் திருப்பித் தரவில்லையாம். இதையடுத்து அவருக்கும், புத்தகத்தை வாடகைக்கு விட்ட சாமியாருக்கும் இடையே அடிதடியாகி ஒருவர் காயமடைந்து, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு சாமியாராம். முன்பு திருவண்ணாமலையில் உள்ள சிவானந்தா மடத்தில் தங்கியிருந்தார். அப்போது பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், கஞ்சா அடித்ததாகவும் சர்ச்சையாகி பொதுமக்களால் தர்ம அடி கொடுத்து விரட்டப்பட்டார்.
கஞ்சா வழக்கு ஒன்றும் இவர் மீது இன்னும் நிலுவையில் உள்ளதாம். திருவண்ணாமலையில் தனக்கு முக்தி கிடைக்காததால், அங்கிருந்து தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலைக்கு ஷிப்ட் ஆகி வந்தார். அங்கு மணிகண்டன் என்பவருடன் (இவரும் சாமியாராம்) பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே இடத்தில் டேரா போட்டு ஆண்டவன் பணியில் ஈடுபட்டுள்ளனராம்.
இந்த நிலையில் மணிகண்டன் சாமியார் வைத்திருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்த முருகனுக்கு அதில் ஆர்வம் வந்தது. மணிகண்டன் வைத்திருந்த புத்தகம், பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்பது குறித்த டிப்ஸ்கள் இடம் பெற்ற புத்தகமாகும்.
அதை வாங்கிப் படித்த முருகன், திருப்பித் தரவில்லையாம். ஓசியில் படிக்கக் கொடுத்தால் திருப்பித் தருவதில்லையா என்று கேட்டு முருகனிடம் சண்டை பிடித்துள்ளார் மணிகண்டன். இதுதொடர்பாக இருவருக்கும் அடிதடியாகி கட்டிப் புரண்டு சண்டை போட்டனராம்.
புத்தகத்தை திருப்பி தர மறுத்த தன்னை மணிகண்டன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், பலமாக தாக்கியதாகவும், இதனால் அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications