சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 100 ஆக உயர்வு
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் வென்றதன் மூலம் சட்டசபையில் திமுகவின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று நடந்த பென்னாகரம் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் இன்பசேகரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தமிழ்க்குமரனை வென்றுள்ளார். அதிமுக டெபாசிட் இழந்ததோடு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இந்த வெற்றியையும் சேர்த்து தற்போது தமிழக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
புதிய சட்டசபையின் முதல் எம்.எல்.ஏ.
வெற்றி பெற்ற இன்பசேகரன் இன்று முற்பகல் 11 மணியளவில் புதிய சட்டசபையில் உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்கிறார்.
சபாநாயகர் அறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், சபாநாயகர் ஆவுடையப்பன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
புதிய சட்டசபையில் உறுப்பினராக பதவியேற்றும் முதல் எம்.எல்.ஏ இன்பசேகரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி - இன்பசேகரன்
இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்ற இன்பசேகரன் அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டு சென்னை விரைந்தார். முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இன்பசேகரன் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது சாதனைகளுக்காக பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றி கிடைத்துள்ளது. எனது தந்தை பென்னாகரம் தொகுதிக்கு எப்படி அயராது பாடுபட்டாரோ அதுபோலவே நானும் நமது தலைவர் மற்றும் தளபதி வழியில் பாடுபடுவேன்.
நமது தலைவர், தளபதியிடம் எடுத்து சொல்லி பென்னாகரம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தருவேன். என்னை அமோகமாக வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் தொகுதி மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பென்னாகரம் தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ அவற்றையெல்லாம் தலைவரிடமும், தளபதியிடமும் எடுத்து சொல்லி நிறைவேற்றுவேன். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதே எனது முதல் பணியாக இருக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தொகுதிக்கு தேவையான தொழிற்சாலைகளை கொண்டு வரவும் பாடுபடுவேன் என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications