ஹைதராபாத்தில் தொடரும் பதட்டம் - மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பழைய ஹைதராபாத் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஹைதராபாத் நகரம் பெரும் போர்க்களமாகியுள்ளது. இதுவரை வன்முறைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து பழைய ஹைதராபாத் பகுதியில் 17 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது மேலும், எட்டு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிலைமை தொடர்ந்து பதட்டமாக இருப்பதாகவும், இருப்பினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மாநில டிஜிபி கிரிஷ்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஹைதராபாத்தின் முக்கியப் பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இருப்பினும் நேற்று இரவு முதல் புதிதாக எந்த வன்முறையும் இடம் பெறவில்லை.
தென் மண்டலப் பகுதியில் நிலைமை அமைதியாக உள்ளது. சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு கூட பகுதியாக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் புதிய நகர்ப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது என்றார்.
வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுப்பியுள்ள கூடுதல் படையினரும் ஹைதராபாத் வந்து சேர்ந்துள்ளனர். தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்தில், பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications