அதிமுக தோல்விக்கு கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்: தா.பாண்டியன்
திண்டுக்கல்: பென்னாகரம் தேர்தலின் போது, கூட்டணி ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடுகளின் காரணமாகவே அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மொத்தம் 2 லட்சத்து ஆயிரத்து 8 ஓட்டுகள் கொண்ட பென்னாகரம் சட்டசபைத் தொகுதிக்கு நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் அதிமுக 28,784 ஓட்டுகள் மட்டுமே பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது.
டெபாசிட் இழக்கும் அளவுக்கு அதிமுக தோல்வியை தழுவியது அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் திண்டுக்கல்லில் நிருபர்களை சந்தித்தபோது தோல்விக்கான காரணம் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், 'பென்னாகரம் தேர்தல் முடிவு அதிர்ச்சியையோ, ஆச்சர்யத்தையோ ஏற்படுத்தவில்லை. அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றதற்கு, கூட்டணியில் நிலவும் சில குறைபாடுகளே காரணம்.
விரைவில் அவற்றை முழுமையாக களைய நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்பதற்கு ஜோதிடம் சொல்ல முடியாது.
காங்கிரசில் பாரம்பரியம் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், தமிழக கூட்டணியில் மாற்றம் வரும். கூட்டுக்கொள்ளை அடிப்பதை தொடர விரும்பினால், மாற்றத்திற்கு வாய்ப்பில்லை.
தமிழகத்தில் வறட்சியால் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், அதிக மின்வெட்டு மக்கள் மீது பேரிடியாக விழுந்துள்ளது. பஞ்சாலைகளில் ஒரு கிலோ நூல் உற்பத்திக்கான செலவினம் ஏழு ரூபாய் அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக மில்கள் மூடல், ஆட்குறைப்பு போன்றவை அதிகரிக்கும். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார்.
-
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக்












Click it and Unblock the Notifications