பெட்ரோல், டீசல்: இன்றிரவு முதல் லிட்டருக்கு 50 பைசா உயர்கிறது
டெல்லி: சென்னை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் இன்றிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்கிறது.
டெல்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், லக்னோ, கான்பூர், ஆக்ரா, அகமதாபாத், புனே, சோலாப்பூர், சூரத் ஆகிய 13 நகரங்களில் நாளை முதல் 'யூரோ-IV' தரம் கொண்ட தூய எரிபொருள் வினியோகம் தொடங்கப்பட உள்ளது.
ஐரோப்பிய மாசு கட்டுப்பாட்டு தர நிர்ணயப்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த இந்த 'யூரோ-IV' எரிபொருள் வினியோகத்துக்காக எண்ணெய் நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிட்டுள்ளன.
இந்த கூடுதல் செலவை ஈடுகட்டும் வகையில் இந்த 13 நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையில் லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்படுகிறது.
இதேபோல் இந்தியாவின் இதர நகரங்களில் எரிபொருள் வினியோகம் தற்போது பயன்பாட்டில் உள்ள யூரோ-II தரத்தில் இருந்து, யூரோ-IIIக்கு மேம்படுத்தப்பட உள்ளது.
யூரோ-III வினியோகிக்கப்படும் நகரங்களில் பெட்ரோல் விலை 26 பைசாவும், டீசல் விலை 21 பைசாவும அதிகரிக்கும்.
இதுதொடர்பாக பெட்ரோலிய அமைச்சம் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து விலையேற்றத்துக்கான ஒப்புதலை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று இரவு முதல் அந்தந்த நகரங்களில் விற்கப்படும் விலைக்கு கூடுதலாக 21 பைசா முதல் 50 பைசா வரை பெட்ரோல், டீசல் விற்பனையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications