மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் மறியல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கீரிப்பட்டி பொது மக்கள் தண்ணீர் கேட்டு திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், கீரிப்பட்டி பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த பகுதியில் தண்ணீர் வரும் குழாயை சிலர் அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கீரிப்பட்டியில் தனி தண்ணீர்த் தொட்டி அமைக்க வேண்டும் என்றும், பொதுப் பாதையில் நடக்க விடாமல் தடுப்போரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரி அப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காட்வின் ஜெகதீஷ்குமார், சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தார். இதனையடுத்து பொதுமககள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications