டெல்லியில் இன்று ஆட்டோக்கள் ஓடவில்லை!
டெல்லி: டெல்லியில் மூன்று சக்கர வாகனங்களை தடை செய்யும் முடிவை எதிர்த்து ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் ஆட்டோக்களின் சேவை மிகவும் மோசமான வகையில் இருப்பதாகவும், பொதுமக்கள் இதனால் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்குவதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் சில வாரங்களுக்கு முன்பு கவலை தெரிவித்தார்.
அதோடு, 'பொது மக்களின் போக்குவரத்துக்கு சரியான முறையில் உதவும் மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்தித்து வருகிறோம்' என்றும் ஷீலா தீட்ஷித் கூறினார்.
எனவே டெல்லியில் ஆட்டோக்களை ஒழித்துக்கட்டும் முடிவை அரசு மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியும், கட்டண உயர்வு கோரியும் ஆட்டோ சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துவதாக அறிவித்தன.
ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஆனால் பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் 24 வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நள்ளிரவு 12 மணி முதலே கட்டாயமாக தொடங்கிவிடும் என அறிவித்தன.
டெல்லி மாநகரில் ஆட்டோக்களை ஒழித்துக்கட்டும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறிய போக்குவரத்து அமைச்சர அர்வித்தர் சிங், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஆனாலும் திட்டமிட்ட படி இன்று பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பஸ் நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் ஆட்டோக்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.












Click it and Unblock the Notifications