கடன் தொல்லை - 2 குழந்தைகளைக் கொன்று கணவன், மனைவி தற்கொலை முயற்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஆசிரியையையும், அவரது கணவரும் கடன் தொல்லை காரணமாக தங்களது இரு குழந்தைகளுக்கு விஷம் குடித்துக் கொலை செய்தனர். பின்னர் தாங்களும் விஷம் குடித்தனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் பாண்டி ஜெயராஜ். இவர் மனைவி சந்திரா. இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சந்திரா பேரூரணியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜெயராஜ் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு சொர்ண பிரியா, நிவேதா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஓன்றில் படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஜெயராஜ், அவரது மனைவி, 2 குழந்தைகள் வழக்கம்போல இரவு கதவை பூட்டி விட்டு படுக்கைக்கு சென்றனர். நேற்று காலையில் அவரது வீட்டில் யாரும் வெளியே நடமாடாமல் இல்லாமல் வீட்டின் உள்பக்கம் கதவு பூட்டப்பட்டிருந்தது.
சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு ஜெயராஜ், அவரது மனைவி சந்திரா, 2 குழந்தைகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையில் மயங்கி கிடந்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்து விசாரணை நடத்திய அவர் மயங்கி கிடந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதில் 2 குழந்தைகளும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஜெயராஜ், சந்திரா இருவருக்கும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடன் தொல்லை காரணமாக 4 பேரும் விஷம் குடித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications