கார்கரேயின் கவச உடை ஏகே47 குண்டுகளை தடுக்கக்கூடியவை அல்ல - மகாராஷ்டிர அரசு

கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தீவிரவாதிகள் மும்பைக்குள் புகுந்து பல்வேறு இடங்களில் பொதுமக்களின் உயிர்களை சூறையாடிக் கொண்டிருந்தனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்த தீவிரவாதிகள் காமா மருத்துவமனையில் இருப்பதாக மஹாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரேக்கு தகவல் வந்தது.
இதையடுத்து காமா மருத்துவமனை நோக்கி கார்கரே விரைந்தார். அப்போது அவரின் ஜீப்பில் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், ஏசி அஷோக் காம்தே ஆகியோர் உடன் சென்றனர்.
அவர்களை நோக்கி மருத்துவமனை பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதி அஜ்மல் கசாப் ஏகே47 துப்பாக்கியால் தாறுமாறாக சுட்டான்.
இதில் போலீசார் மூவரும் வீரமரணம் அடைந்தனர். முன்னதாக குண்டடி பட்ட மூன்று அதிகாரிகளும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, கார்கரேயின் உடலில் இருந்த குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை காணாமல் போயிருந்தது.
இதுபற்றி பின்னர், கார்கரேயின் மனைவி கேள்வி எழுப்பிய போது, கார்கரேயின் கழுத்து உள்ளிட்ட பகுதியில் குண்டு துளைத்ததால் தான் உயிர் இழந்தார் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட கவச உடைகள் பழுதானவை என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கையில்,
'கார்கரே உள்ளிட்ட மூன்று போலீசாரும் அணிந்த கவச உடைகள் கடந்த 2001ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. அந்த கவச உடைகள் 9எம்எம் பிஸ்டல் துப்பாக்கி குண்டுகளில் இருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கக்கூடிவை.
ஏகே47 ரக துப்பாக்கி குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அந்த கவச உடை தயாரிக்கப்படவில்லை' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'எனினும் கார்கரே பலியானதற்கும் கவச உடை பிரச்னைக்கும் தொடர்பில்லை. துப்பாக்கி குண்டு கழுத்துப் பகுதியில் துளைத்ததால் தான் அவர் இறந்தார். இதனால் அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடையால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியாது' என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications