மோடியை விசாரிக்க நானாவதி கமிஷனும் சம்மன் அனுப்புமா?

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்காக சமீபத்தல் நேரில் ஆஜரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இன்னொரு சிக்கல் எழுந்துள்ளது. குஜராத் கலவரம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட நானாவதி கமிஷனின் விசாரணைக்கும் அவர் அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

கடந்த வாரம்தான் மோடி எஸ்ஐடி விசாரணையில் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நானாவதி கமிஷனும், மோடியை விசாரிக்கலாம் என்று தெரிகிறது.

நானாவதி கமிஷன் கடந்த 2002ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது விசாரணையின் முதல் பகுதியை அது முடித்த்து. 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என்று அது தனது அறிக்கையில் கூறியிருந்த்து. அதேசமயம், மோடிக்கும், குஜராத் கலவரத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்றும் அது கூறியிருந்த்து.

மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கமிஷன் கூறுகையில், மோடியை விசாரிக்க நேரில் அழைக்கத் தேவையில்லை என்றும் கூறியிருந்தது.

இதை எதிர்த்து ஜன் சங்கர்ஷ் மன்ச் என்ற அமைப்பு குஜராத் உயர்நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மோடியை அழைத்து விசாரிப்பீர்கள் இல்லையா என்பது குறித்த தெளிவுபடுத்துமாறு இந்த மாத்த் தொடக்கத்தில் நானாவதி கமிஷனுக்கு உத்தரவிட்டிருந்தது. இநத நிலையில் ஜூன் 17ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போதுதான் மோடியை நானாவதி கமிஷன் விசாரணைக்கு அழைக்குமா, இல்லையா என்பது தெரிய வரும்.

நரேந்திர மோடி அரசுதான் நானாவதி கமிஷனை நியமித்த்து என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், மோடியை சமீபத்தில் விசாரித்த எஸ்.ஐ.டியை உச்சநீதிமன்றம் நியமித்த்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+