3 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை!

நெல்லை மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. சங்கத்தின் நிர்வாகிகள் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து கூறினர்.
சாலைகளில் விபத்துகளில் அடிபடும் பிராணிகளை காப்பாற்றுவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் தேவைப்படுகிறது என சங்கத்தினர் வலியுறுத்தினர்.
மேலும் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பள்ளி கல்லூரிகளில் பிராணி வதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டங்கள் நடத்தவும் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க சுமார் 3 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடத்தவும் தயாராகி வருவதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 'பிராணிகள் வதை தடுப்பு சங்கம் என்ற ஒரு சங்கம் இருப்பது பலருக்கு தெரியாது. பிராணிகள் நலன் காப்பதில் அனைவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் அதிக நாய்கள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. அவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்ட நாய்களை அப்புறப்படுத்த கூட யாரும் முன்வருவதில்லை.
இந்த அமைப்பின் முலம் அனைவரது மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications