கோவை ஹோட்டலுக்கு அல் கொய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல்
கோவை: கோவையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அல் கொய்தா அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கோவையில் வருகிற ஜூன் மாதம் 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அங்குள்ள பல்வேறு ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவை புக் செய்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக இப்போதே பல்வேறு உயர் போலீஸ் அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அல் கொய்தா அமைப்பின் பெயரில் வந்துள்ள அந்த இமெயிலில், 'எங்களது ஹிட்லிஸ்ட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். எங்கள் செயலுக்கு நீங்கள் உதவ வேண்டும். அப்படி மறுக்கும் பட்சத்தில், அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும். உங்கள் ஹோட்டல் வெடி வைத்து தகர்க்கப்படும் என வாசகம் இருந்த்து.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குத் தகவல் தரப்பட்டது. புகரைப் பெற்ற போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சைபர் கிரைம் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications