மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து தருக – பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்களுக்கும், தலித் அந்தஸ்து தரப்பட வேண்டும். இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடித்த்தில் கூறியுள்ளதாவது:
தொடக்கத்தில், அரசியல் சட்டத்தின் (தாழ்த்தப்பட்டோர்) 3வது பாராவில், இந்து மதத்திலிருந்து வேறு மாத்த்திற்கு மாறிய எந்த தலித் வகுப்பைச் சேர்ந்தவரும், அதே தலித் வகுப்பினராக கருதப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த்து. பின்னர் அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, சீக்கிய, புத்த மதத்தைச் சேர்ந்த தலித்கள், தலித்களாக அந்தஸ்து அளிக்கப்பட்டனர்.
ஆனால் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள், எந்த மத்த்தைச் சேர்ந்தவர்கலாக இருந்தாலும் ஒரே மாதிரியாக கருதப்பட வேண்டும். ஒரே மாதிரியாக அவர்களுக்கு எஸ்.சி என்ற அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கருதுகிறது. இதுதான் அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகவும் இருக்கும்.
எனவே இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிட வேண்டும். மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து கிடைக்க வழி செய்ய வேண்டும். இதற்குத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்க எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications