அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – லாரி ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: தமிழக போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேருவுடன் இன்று லாரி உரிமையாளர் சம்மேளனம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதாக இருந்த்து. ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதை அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் ஒத்திவைத்துள்ளது.
இருப்பினும் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மாநில லாரி உரிமையாளர்கள் திட்டமிட்டபடி போராட்டம் தொடங்கும் என்று அறிவித்தனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் சப்ளை பாதிக்கும் சூழ்நிலை எழுந்த்து.
இதைத் தொடர்ந்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண தமிழக அரசு முடிவு செய்த்து.
அதன்படி சென்னையில் இன்று போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேச்சவார்த்தை நடந்த்து.
இதில் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதுகுறித்துக் கூறிய சம்மேனளத்தினர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாகவும் கூறினர்.












Click it and Unblock the Notifications