பாக். நாடாளுமன்றத்தில் சர்தாரியின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா தாக்கல்!
Subscribe to Oneindia Tamil

ஜியா உல் ஹக், முஷாரப் போன்றவர்கள் ஆட்சிக்காலங்களில் நாடாளுமன்றத்துக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, அதிபர் பதவியில் கூடுதல் பலத்துடன் சர்வாதிகாரம் செய்து வந்தனர்.
தற்போது பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி நடப்பதால், நாடாளுமன்றத்துக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து ஒன்பது மாதத்துக்கு முன் மசோதாவை உருவாக்கும் பணிகள் தொடங்கின. நேற்று மசோதா முழுமை செய்யப்பட்டு, சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இம்மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் 5ம் தேதி அதிபர் சர்தாரியின் உரையைத் தொடர்ந்து, இம்மசோதா மீதான விவாதம் செனட் மற்றும் தேசிய சபைகளில் நடக்கும்.












Click it and Unblock the Notifications