ரூ 12 லட்சம் லஞ்சம்: போலீஸ் இன்ஸ்பெக்டர், ஓய்வு பெற்ற தபால்துறை உயரதிகாரி வீடுகளில் அதிரடி சோதனை!

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நிர்வாக பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றியவர் செந்தில்குமார்(48) மீது பல்வேறு லஞ்சப் புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் செல்வம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், தனது தொழில் பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்ச பணத்தை அவர் சொன்னபடி அவரின் மாமனாருடைய வங்கி கணக்கில் போட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் சிபாரிசு செய்தார்.
ஓய்வு பெற்ற தபால்துறை உயரதிகாரி பிரமானந்தம்
லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரின் வீட்டிலும், பக்கத்து தெருவில் உள்ள அவரது மாமனார் பிரம்மானந்தம் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
பிரம்மானந்தம் ஓய்வு பெற்ற தபால்துறை உதவி ஜெனரல் மானேஜர். மாதம் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் அவரின் வீட்டில் ரூ.11/2 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது.
லஞ்சப்பணம் தனது வங்கிக் கணக்கில் போடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரமானந்தம் மறுத்துள்ளார். வங்கிக் கணக்கில் அதற்கான ஆதாரங்களும் இல்லை.
எனவே இதுபற்றி புகார் தாரரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications