பட்டமளிப்பு கவுன் அணிவது காட்டுமிராண்டித்தனமானது – ஜெயராம் ரமேஷ் ஆவேசம்

போபாலில் நடந்த இந்திய வன நிர்வாக கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் ஜெயராம் ரமேஷ். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குவோருக்கு பட்டமளிப்பு கவுன் அணிவிக்கப்படுவது வழக்கமாகும்.
அதன்படி ஜெயராம் ரமேஷுக்கும் அது அணிவிக்கப்பட்டது. இதையடுத்து மைக்கைப் பிடித்த ஜெயராம் ரமேஷ். இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளைக் கடந்தும் நாம் ஏன் இன்னும் காட்டுமிராண்டித்தனமான வெள்ளையர் காலத்துப் பழக்க வழக்கங்களை பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை.
இதை நான் விரும்பவில்லை என்று கூறினார். அத்தோடு நில்லாமல் வேகமாக தனது பட்டமளிப்பு கவுனையும் கழற்றி தூரப் போட்டார். இதனால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர் பேசுகையில், சாதாரண உடையில் வந்து பட்டங்களை வாங்கக் கூடாதா அல்லது பட்டங்களைக் கொடுக்கக் கூடாதா?. போப்பாண்டவர்களைப் போல உடை அணிந்து வந்துதான் பட்டங்களைக் கொடுக்க வேண்டுமா, பெற வேண்டுமா?. இதை மாற்ற வேண்டும் என்றார் ஜெயராம் ரமேஷ்.
ஜெயராம் ரமேஷின் இந்தப் பேச்சு மற்றும் செயலால் மாணவர்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டாலும் கூட அதன் பின்னர் செமத்தியான கைத்தட்டல் கிடைத்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications