ஈஸ்டர் பண்டிகை – ஜெ., தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

ஈஸ்டர் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் என் அன்பிற்கினிய கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிறிஸ்தவர்களின் இறைவனான ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இவ்வாறு ஏசுபிறான் சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்த திருநாளே ஈஸ்டர் பண்டிகையாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

மதங்களின் பெயராலே மனிதர்களை பிரிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்ற உண்மையை உணர்த்தும் வகையில் தன்னைப் போலவே பிறரையும் நேசி என்ற தத்துவத்தை போதித்தவர் ஏசுபிரான்! கர்த்தரின் கருணையால் அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் உண்டா கட்டும்.

இந்த இனிய திருநாளில் இதயத்தால் அனைவரும் ஒன்றுபட எனது நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செய லாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

இயேசு பெருமான் உயிர்த் தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகைத் திருநாளாக உலகம் கொண்டாடுகிறது. துயரப்படு கிறவர்களுக்கும், அல்லலுக்கு ஆட்படுகின்றவர்களுக்கும் ஒரு வெளிச்ச விடியல் ஏற்பட்டுத் தீரும் என்ற நம்பிக்கையை ஈஸ்டர் பண்டிகை மனித குலத்துக்கு வழங்குகிறது.

கிறிஸ்தவ பெருமக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் எனது இதய நிறைந்த ஈஸ்டர் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

மனித சமுதாயத்தில் அழுத்தப்பட்டு, நலிவடைந்த மக்களின் மீட்சிக்காகவே சிலுவையில் ரத்தம் சிந்தி தன்னை மரணத்திற்கு ஒப்புவித்த இயேசு பிரான் மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்த ஈஸ்டர் பண்டிகை இன்று உலகெங்கும் கிறிஸ்தவ பெருமக்களால் மகிழ்ச்சி யோடு கொண்டாடப்படுகிறது.

அப்புனித நாளான இன்று மத, சாதி, இன வேறு பாடுகளை மறந்து வன்முறை ஒழிந்து அனைவரிடமும் அன்பு, பாசம், கருணை மிகுந்து இயேசு போதித்த சகோதரத்துவம் மிளிர்ந்து நல்லிணக்கம் உயர்ந்து மகிழ்ச்சி பொங்கிட அனைவரும் ஒன்றிணைவோம் என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,

ஏசு தலையில் முள்முடி, பாரமான சிலுவை, அந்தச் சிலுவையோடு சேர்த்து ஆணிகளால் அடிக்கப்பட்ட கொடுமை, இத்தனை துன்பங்களை அனுபவித்த போதி லும் தம்மை துன்புறுத்தியவர்களை மன்னியும் என்று இறைவனிடம் மன்றாடினார் என்று விவிலியத்தில் படிக்கிறோம்.

அவரது உயிர்த்தெழுதல் பண்டிகையைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் அவரைப் பின் பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர் களை மன்னிக்கவும் கற்றுக் கொள்வோம். பசித்தவர்களுக்கு உணவு அளிக்க முன் வருவோம். ஏழைகளை நேசிப்போம் என்று கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துச் செய்தியில்,

ஏழைகளுக்கு தொண்டு செய்வோர் என்றும் சாவ தில்லை என்ற தத்துவத்தை எடுத்து காட்டுகின்ற நன்னாளே ஈஸ்டர் திருநாளாகும். இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்று சொல்லிலும், செயலிலும் செயல்பட்டு வரும் தே.மு. தி.க.வின் சார்பில் இந்த ஈஸ்டர் திருநாளில் எல்லா வகையான மேம்பாட்டையும், முன்னேற்றத்தையும் அடைய கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு என்னுடைய இதயமார்ந்த ஈஸ்டர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+