ப.சிதம்பரம் பயணிக்க இருக்கும் பகுதியில் மாவோயிஸ்ட் கண்ணிவெடி தாக்குதல்!
மிட்னாப்பூர்: மேற்கு வங்கத்தில் நக்சல் பாதித்த பகுதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நாளை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேற்குவங்கம், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால்கர் பகுதியில் மாவோயிஸ்ட் நக்சல் ஆதிக்கத்தை அகற்றி பாதுகாப்பை பலப்படுத்த கடந்த சில வாரங்களாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், இங்குள்ள உயர் அதிகாரிகளுடன் நேரில் ஆலோசனை நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாளை லால்கருக்கு வர உள்ளார்.
இதையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள், சிறப்பு மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீசார் என ஏராளமான பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் உளவுப் பிரிவு போலீசாரும் இதர பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லால்கர் பகுதியில் பாமல் என்ற பகுதியில், சாலையில் மாவோயிஸ்டுகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து பாதுகாப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications