அமெரிக்காவை விட சிறந்த திட்டம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் – ஸ்டாலின்
வேலூர்: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 1.4 கோடி குடும்பத்தினர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அமெரிக்காவின் சுகாதாரத் திட்டத்தை விட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மிகச் சிறப்பானது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டு திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
'சிஎம்சி மருத்துவமனையை எந்த நோக்கத்துக்காக ஐடா ஸ்கடர் உருவாக்கினாரோ, அதுபோல தான் கலைஞர் காப்பீட்டு திட்டமும் தொடங்கப்பட்டு உள்ளது.
நோய் என்பது பணக்காரன், ஏழை என்று பார்த்து வருவதில்லை. பணக்காரர்கள் பணம் செலுத்தி உயர் சிகிச்சைகளை பெருகின்றனர். அதுபோல தரமான உயர் சிகிச்சைகள் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது கலைஞர் காப்பீட்டு திட்டம்.
தமிழக அரசு இந்த திட்டத்துக்காக ரூ.517 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் ஒரு கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்து 532 குடும்பங்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அதில் ஒரு கோடியே 31 லட்சத்து 46 ஆயிரத்து 566 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற 567 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்த திட்டத்தில் இணைய பல மருத்துவமனைகள் தயக்கம் காட்டியது உண்மை தான்.
தயக்கத்துக்கு காரணம் என்ன என்றால், இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என அவர்கள் நினைத்தது தான். ஆனால் இந்த திட்டம் வெற்றி பெற்று விட்டதால் தற்போது போட்டி போட்டு கொண்டு பல மருத்துவமனைகள் திட்டத்தில் சேர வருகிறார்கள்.
அண்மையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். அங்கு காப்பீட்டுக்கான தொகையை தொழிலாளர்களுக்காக தொழிலதிபர்கள் செலுத்த வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டில் காப்பீட்டு தொகையை மக்களும் செலுத்த வேண்டியது இல்லை, நிறுவனங்களும் செலுத்த வேண்டியது இல்லை. அரசே செலுத்திவிடுகிறது' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications