தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் சிறிய இடைவெளிக்குப் பிறகு நாளை மீண்டும் கூடுகிறது.
புதிய சட்டசபையில் கடந்த 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஏப்ரல் 5ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் கூடுகிறது.
நாளை தொடங்கி வருகிற வியாழக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். 9ம் தேதி வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் அன்பழகன் பதில் அளிப்பார்.
நாளை கூடும் சட்டசபைத் தொடரின்போது பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications