முத்தம் கொடுத்ததால் சிறை தண்டனை - பிரிட்டன் ஜோடியின் அப்பீல் மனு தள்ளுபடி
துபாய்: துபாயில் பொது இடத்தில் முத்தம் கொடுத்ததால் சிறை தண்டனை பெற்ற பிரிட்டன் இளஞ்ஜோடிகளின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காதல் ஜோடி அய்மன் நஜாபி (24), சார்லோட் (25). அய்மன் நஜாபி துபாயில் ஹே குரூப் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சார்லோட் லண்டனில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார்.
காதலரை பார்க்க சார்லோட் துபாய் வந்திருந்தார். இருவரும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது இருவரும் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு அருகில் 38 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் தனது 2 வயது மகளுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார்.
ஜோடிகள் முத்தமிடுவதை தனது சின்னஞ்சிறு மகள் பார்த்துவிட்டாள் என்றும், இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறி அந்த பெண்மணி போலீசில் புகார் கொடுத்துவிட்டார்.
இந்த புகாரின் பேரில் இங்கிலாந்து ஜோடியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துபாய் சட்டப்படி பொது இடத்தில் முத்தம் கொடுத்தது தவறு என தீர்ப்பானது.
இதனால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இளஞ்ஜோடிகளுக்கு எதிராக நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆனால், இந்த உத்தரவை ஏற்க முடியாது என பிடிவாதமாக கூறியது இங்கிலாந்து காதல் ஜோடி. இதையடுத்து இருவரின் பாஸ்போர்ட்டை போலீசார் கைப்பற்றி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
'நாங்கள் உதட்டில் முத்தம் கொடுக்கவில்லை. கன்னத்தில் தான் முத்தம் கொடுத்துக் கொண்டோம். அன்பை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்தோம்' என எவ்வளவோ வாதாடியும், அவர்களின் மனுவை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
ஏற்கனவே விதித்த தீர்ப்பின் படி ஒரு மாத சிறை வாசமும், ஆயிரம் திர்காம் அபராதமும் செலுத்தி தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, செக்ஸியான எஸ்எம்எஸ் அனுப்பிய இந்திய தம்பதியர் மற்றும் கடற்கரையில் செக்ஸ் வைத்துக்கொண்ட பிரிட்டன் ஜோடி ஆகியோர் துபாயில் சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications