மகளிர் மசோதா – அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது

ராஜ்யசபாவில் ஒரு வ்ழியாக மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டாலும் கூட அடுத்து லோக்சபாவை அது தாண்டியாக வேண்டும். ஆனால் அது மிகக் கடுமையானதாக கருதப்படுவதால் அதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளின் நம்பிக்கையையும் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தத்தமது நிலையை தெரிவித்தனர். ஆனால் ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை.
கூட்டம் குறித்து பின்னர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவிக்கையில், இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பிரதமரிடம் கொண்டு செல்வேன். மீண்டும் ஒரு கூட்டம் தேவைப்பட்டால் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
மகளிர் மசோதா தொடர்பாக பிடிவாதமான நிலையை மேற்கொண்டு வரும் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் ஆகியோர் இன்றைய கூட்டத்திலும் தங்களது நிலையை உறுதியுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இவர்களை சந்தித்துப் பேசப் போவதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து மமதா கூறுகையில், இந்த மசோதா எப்படியாவது தாக்கல் செய்யப்பட்டாக வேண்டும். நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.
இதற்காக முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளேன் என்றார்.
கூட்டத்தல் பங்கேற்ற மூன்று தலைவர்களும் இறுகிய முகத்துடன் காணப்பட்டனர். இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக இக்கூட்டம் குறித்து முலாயம் சிங் யாதவும், லாலு பிரசாத் யாதவும் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தற்போதைய வடிவில் மகளிர் மசோதாவை ஏற்கவே முடியாது. அதை கடுமையாக எதிர்ப்போம். முஸ்லீம்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கண்டிப்பாக மகளிர் மசோதாவில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். இந்த நிலையில் எங்களிடம் எந்த மாற்றமும் இல்லை.
நாங்கள் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
தற்போதைய வடிவில் மகளிர் மசோதாவை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தொடர்ந்தும் எதிர்ப்போம் என்றனர் அவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications