மும்பையில் ரூ.36 கோடிக்கு விற்ற டூப்ளெக்ஸ் ஃபிளாட்!
மும்பை: மும்பை வோர்லி பகுதியில் அமைந்துள்ள சமுத்திர மஹாலில் உள்ள, 'கடல் பார்த்த டூப்ளெக்ஸ் வீடு' ரூ. 36 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
மூவாயிரத்து 640 சதுரடி கொண்ட இந்த வீட்டில் நான்கு பெட்ரூம்கள், ஒரு நீச்சல் குளம் மற்றும் சிறிய விளையாட்டு மைதானமும் உள்ளது.
மும்பையின் புகழ் பெற்ற சமுத்திர மஹாலின் 19வது மற்றும் 20வது மாடியில் இந்த ஃபிளாட் உள்ளது. ஏராளமான விவிஐபிக்கள் மற்றும் பிரபலங்கள் இந்த மஹாலில் வசித்து வருவதால் ரியல் எஸ்டேட்டில் இதற்கு தனி 'கிராக்கி'.
பிரபல தொழிலதிபர் நுஸ்லி வாடியா இந்த இடத்தை ஏற்கனவே வைத்திருந்தார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, 8 ஆயிரம் சதுரடியாக இருந்த இந்த வீட்டை வாடியா குடும்பத்தினர் ரூ.31 கோடிக்கு விற்றுள்ளனர்.
தற்போது லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நைட் ஃபிராங்க் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனை நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications
