ஆயுத உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு உயரலாம்! - கமல்நாத்
டெல்லி: ஆயுத உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) வரம்பை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆயுதத் தேவையை நிறைவு செய்வதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனாலும் இந்த முடிவு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பாக வெளியிட இன்னும் அவகாசம் இருப்பதாகவும், இதில் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
வர்த்தக அமைச்சகம் மட்டுமின்றி பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம், தொழில் கொள்கை துறை, மத்திய திட்டக் குழு உள்ளிட்டவை இது குறித்து விவாதித்து வருகின்றன.
அரசு நிறுவனங்களின் தளவாட உற்பத்தி மதிப்பு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை. இவை போதாத நிலையில் தனியார் நிறுவனங்கள் சிலவும் ஆயுத உற்பத்தியில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயுத உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 26 சதவீதத்துக்கு இருக்கலாம்.
இன்றைய நிலையில், லார்சன் அன்ட் டியூப்ரோ, டாடா, மஹிந்திரா, புஞ்ச் லாயிட் ஆகிய தனியார் நிறுவனங்கள் ஆயுத தளவாட தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளன.
ராணுவத்தில் மொத்தம் 15 லட்சம் வீரர்கள் உள்ளனர். உலகிலேயே மிக அதிக அளவு படை வீரர்களைக் கொண்டுள்ள இரண்டாவது பெரிய நாடு இந்தியாதான்.
எனவே ஆயுத உற்பத்தியில் அந்நிய முதலீட்டின் பங்கை இன்னும் சில சதவிகிதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications