எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை!

வரும் கல்வியாண்டு முதல் இந்த பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் சாதாரண ஃபார்மல் ஆடைகளையும், மாணவிகள் சல்வார் அல்லது புடவை அணிய வேண்டும் என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜீன்ஸ், டிசர்ட், ஸ்கர்ட், மிடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, நகைகள், பெர்ஃபியூம்கள் பயன்படுத்துவதை பல்கலைக்கழக நிர்வாகம் தடை செய்துள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் இந்த சட்டதிட்டங்கள் முழுமையாக அமலுக்கு வரும் என பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவிக்கையில், 'நான் இளைஞர்கள் விருப்ப ஆடை அணியக்கூடாது என நினைப்பவன் அல்ல.
மருத்துவம் சார்ந்த சூழலில் சில ஒழுக்க முறைகளை நாம் பின்பற்றியாக வேண்டும். பூக்கள், வாசனை பொருட்கள், விரல் நகங்கள் போன்றவை நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
மேலும் நோயாளிகளின் மனதை திசை திருப்பும் வகையில் மாணவிகள் ஆடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது என்ற அடிப்படையில் மாணவிகள் டீசர்ட் போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளோம்' என்றார்.
ஆனால், துணைவேந்தரின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 'மிக சொற்பமான விலையில் டி-சர்ட் கிடைக்கும். ஆனால், ஃபார்மல் செட் வாங்க நிறைய செலவாகும்.
அதோடு, டிசர்டை துவைத்து மீண்டும் அணிவது மிகவும் சுலபமானது. ஆனால் ஹாஸ்டல்களில் ஃபார்மல் ஆடைகளை தயார் செய்வது பெரிய வேலை. அதெல்லாம் எங்களுக்கு ஒத்து வருவது கஷ்டம்' எனக் கூறுகின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications