பிஎஸ்சி பிஎட் - ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம்!
சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் பிஎஸ்சி பிஎட் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முதலாம் பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடக்கிறது.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.
முன்னதாக இதுபற்றி சென்னையில் நிருபர்களிடம் பிஎட் பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் பேட்டியளித்தார்.
அப்போது, ஆசிரியர் கல்வி பல்கலையில் புதிதாக 4 ஆண்டு ஒருங்கிணைந்த பிஎஸ்சிபிஎட் என்ற ஆசிரியர் பட்டப்படிப்பை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பத்மநாபன் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 'தமிழகத்தில் பிஎட் படிக்கும் மாணவர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது.
வரும் கல்வியாண்டு முதல் பிஎஸ்சி பிஎட் இரண்டையும் ஒருங்கிணைந்து 4 ஆண்டுகளில் மாணவர்கள் படித்து முடிக்கும் வகையில் பட்டப்படிப்பு அறிமுகமாக உள்ளது.
வழக்கமான பிஎட் படிப்பில் உள்ளதை விட இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் 4 கற்பித்தல் உள்பட பல பயிற்சிகளை சிறப்பாக மாணவர்கள் பெறுவார்கள். எனவே இந்த படிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கும்' என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications