சென்னைக்கு தேசியக் கல்லூரி தேவையில்லை – துரைமுருகன்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் தேசிய சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் படிப்புக்கு நிகரான பட்டப் படிப்பு உள்ளது. எனவே தனியாக தேசியக் கல்லூரி தொடங்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார் மாநில சட்ட அமைச்சர் துரைமுருகன்.
தமிழகத்தில் தேசிய சட்டக்கல்லூரி தொடங்கப்படுமா என சட்டசபையில் திருப்பத்தூர் பாமக எம்எல்ஏ தி.க.ராஜா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் துரைமுருகன், 'இங்குள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் என்ற சட்டப்படிப்பு உள்ளது. இது தேசிய சட்டக் கல்லூரி அளிக்கும் கல்விக்கு நிகரானது.
ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் படிப்புக்கு ரூ.40 ஆயிரம் தான் கட்டணம். வெளிநாட்டிலும் இந்த கல்விக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் தேசிய சட்டக் கல்லூரியில் படிக்க ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்.
தேசிய சட்டக் கல்லூரியை தொடங்கினால், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். அதில் சேரும் நம் மாநில மாணவர்களின் சேர்க்கை மிகக் குறைவாகத்தான் இருக்கும்.
அதிக பணம் செலவு செய்து இங்கு உருவாகும் தேசிய சட்டக் கல்லூரியால் மண்ணின் மைந்தர்களுக்கு பயனில்லாமல் போக வேண்டுமா?
மற்ற பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக கவர்னர் இருப்பதுபோல், தேசிய சட்டக் கல்லூரிக்கு வேந்தராக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இருப்பார். எனவே இது நமக்கு அவசியம் இல்லை' என்றார்.
சென்னை சட்டக்கல்லூரி மோதல் தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன்,
'சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மோதல் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சண்முகம் கமிஷன், அந்தக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.
இதே கருத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் கூறி இருக்கிறார். கமிஷனின் கருத்து, அரசின் பரிசீலனையில் உள்ளது' என்றார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications