உயர்நீதிமன்ற மோதலுக்கு முன்னாள் கமிஷனர் ராதாகிருஷ்ணனே பொறுப்பு: ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீஸ் - வக்கீல் மோதல் சம்பவத்திற்கு முன்னாள் காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனே முழு பொறுப்பாவார் என்று போலீஸ் அதிகாரி ஏ.கே.விசுவநாதன் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காவல் துறையினருக்கும் வக்கீல்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள், அப்போதைய சென்னை காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், இணை ஆணையர் ராமசுப்பிரமணி, துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட்டனர்.
இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கூடுதல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அதில், 'உயர்நீதிமன்றத்திற்குள் சம்பவம் நடந்த அன்று அங்கு இருந்த பி4 போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்காவை நான் பார்க்கவோ, பேசவோ இல்லை.
ஆனால், அவர் என்னிடம் கலந்து ஆலோசித்த பிறகே சட்டவிரோதமாக கூடியிருந்த கும்பலை கலைக்க தடியடி நடத்தியதாக கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது.
நீதிமன்றத்துக்குள் சட்டவிரோதமாக கூடியிருப்பது பற்றியோ, தடியடி நடத்த வேண்டும் என்றோ நான் உத்தரவிடவில்லை. ஒரு கட்டத்தில் போலீசார் வக்கீல்களை நீதிமன்றத்தில் உள்ள இந்தியன் வங்கி வரை விரட்டிச்சென்றனர்.
அப்போது போலீஸ் படையை வாபஸ் பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பலமுறை கேட்டுக்கொண்டேன்.
ஆனால், எனது வேண்டுகோளை அவர் ஏற்கவில்லை. உயர் அதிகாரி என்ற முறையில் அவரை நம்பி அவரது உத்தரவை மட்டும் செயல்படுத்தினேன்.
ஆணையர் ராதாகிருஷ்ணன் கூடுதல் படையுடன் வந்து தடியடி நடத்தியதால் தான் நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
உண்மையில், போலீஸ் படையை வாபஸ் பெறுவதற்கு ராதாகிருஷ்ணன் எனக்கு அனுமதி அளிக்கவில்லை. அவர் வருகைக்கு பிறகே நிலைமை மேலும் மோசமானது.
உயர்நீதிமன்ற சம்பவத்திற்கு போலீஸ் அதிகாரிகள் ராமசுப்பிரமணி, பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் பொறுப்பில்லை. ராதாகிருஷ்ணன் மட்டுமே முழு பொறுப்பாவார்.
எனவே, எனது மனுவை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு அளித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications