எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 15ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி ஆகிய தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.
மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கும், ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கும் 9ம் தேதி தேர்வு முடிவடைகிறது.
தமிழகத்தில் மொத்தம் 10வது வகுப்பு தேர்வை இந்த ஆண்டு 10 லட்சம் பேர் எழுதி வருகிறார்கள். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 15ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட மையங்களில் தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications