மாவோயிட்ஸ் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து சட்டிஸ்கரில் பந்த்
ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள், தான்டேவாடா வனப்பகுதியில் நிகழ்த்திய கொடூரப் படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்து சட்டிஸ்கரில் இன்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து சட்டிஸ்கரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ராய்ப்பூரில் இயல்பு நிலை முற்றிலும் பாதித்துள்ளது. 2வது பெரிய நகரான பிலாஸ்பூர், தொழில் நகரங்களான கொர்பா, ராய்கார், பிலாய் ஆகிய நகரங்களிலும் இயல்பு நிலை பாதித்துள்ளது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பிராந்தியத்திலும் தான்டேவாடா, பீஜப்பூர், நாராயண்பூர், பஸ்தர், கங்கர் ஆகிய நகரங்களிலும் பந்த் போராட்டத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தனேந்திரா சாஹு கூறுகையில், மாநில பாஜக அரசின் தவறான கொள்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து இந்த பந்த் நடத்தப்படுகிறது.
பாஜக அரசின் தவறான போக்கின் காரணமாகவே 76 ஜவான்களின் உயிர் பறிபோயுள்ளது என்றார்.
பந்த் போராட்டத்திற்கு சட்டிஸ்கர் தொழில் வர்த்தக சபை உள்ளிட்ட ஐந்து முக்கிய வர்த்தக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications