பால், பழங்கள் விலை உயர்வு... உணவுப் பணவீக்கம் மேலும் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பால் பொருள்கள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளின் தொடர் விலையேற்றம் காரணமாக மார்ச் 27-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உணவுப் பணவீக்கம் 17.70 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.
இதற்கு முந்தைய வாரத்தில் இது 16.35 சதவிகிதமாக இருந்தது.
ஏப்ரல் 20-ம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி, ரொக்க இருப்பு விகிதம் உள்ளிட்ட பல்வேறு வட்டி விகிதங்களை உயர்த்தக் கூடும் என்ற நிலையில், உணவுப் பணவீக்கம் இந்த அளவு உயர்ந்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த பணவீக்கத்தின் அளவும் 9.89 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பருப்பு வகைகளின் விலை 32.60 சதவிகிதமும், பால் விலை 21.12 சதவிகிதமும், பழங்கள் விலை 14.95 சதவிகிதமும், கோதுமை 13.34 சதவிகிதமும் உயர்ந்திருப்பதாக மத்திய நிதியமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications