தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கற்கும் பாரதம் திட்டம் அமலாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தருமபுரி, சேலம் உள்பட 5 மாவட்டங்களில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு பாடம் சொல்லித்தர 4 ஆயிரத்து 408 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

'கற்கும் பாரதம்' என்ற சிறப்பு கல்வி திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.

எழுத படிக்க தெரியாதவர்கள், வறுமை, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் அறிவொளி கல்வி திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட நிலையில் கற்கும் பாரதம் என்ற சிறப்பு கல்வி திட்டத்தை மத்திய அரசாங்கம் பல மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது.

கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள எழுத படிக்க தெரியாதவர்களை இலக்காகக் கொண்டு இந்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எழுத்தறிவு, எண் அறிவு, சமநிலை கல்வி, தொழிற்கல்வி, வாழ்நாள் பயிற்சி என 4 விதமான பயிற்சிகள் இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்படும்.

இதற்காக தேர்வுசெய்யப்படும் கிராமங்களில் ஊக்குனர்கள் எனப்படும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு அந்த ஊரில் உள்ள பள்ளிகளில் ஓய்வு நேரத்தில் பாடம் நடத்துவார்கள்.

இத்திட்டத்திற்கான செலவில் 25 சதவீதம் மாநில அரசும், எஞ்சிய 75 சதவீதம் மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளும்.

தமிழகத்தில் தற்போது தருமபுரி, சேலம், ஈரோடு, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

முதல்கட்டமாக, திருவண்ணாமலை, அரியலூர் தவிர்த்து 5 மாவட்டங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+