ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு புதிய ரயில் இன்று முதல் இயக்கம்
புதுச்சேரி: ஹவுராவில் இருந்து திருப்பதி வழியாக புதுச்சேரிக்கு புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
ஹவுரா - புதுச்சேரி இடையே திருப்பதி காட்பாடி விழுப்புரம் வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஹவுரா புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று ஹவுராவில் இருந்து மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த ரயில் புதுச்சேரியில் இருந்து ஏப்ரல் 14ம் தேதியும், ஹவுராவில் இருந்து ஏப்ரல் 18ம் தேதியும் இயக்கப்படும்.
ஹவுராவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.
புதுச்சேரியில் இருந்து புதன்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை இரவு 10.25 மணிக்கு ஹவுரா சென்றடையும்.
இந்த ரயிலில் ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி இரண்டும், ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி இரண்டும், எட்டு இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) பெட்டியும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் நான்கும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் தற்காலிகமாக காட்பாடி, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு இயக்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications