சானியா திருமணத்தின் போது போராட்டம் - தமிழக சிவசேனா அறிவிப்பு
நாகர்கோவில்: சானியா மிர்சா பாகிஸ்தானின் மருமகள் ஆவதாக இருந்தால் இந்தியாவில் இருந்து கிடைத்த பரிசுகள் மற்றும் நிதிகளை திரும்ப ஓப்படைக்க வேண்டும், இல்லையெனில் அவரது திருமணத்தின் போது தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என சிவசேனா மாநில தலைவர் ராஜேஷ் நாகர்கோவிலில் கூறினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது ராஜேஷ் கூறியதாவது: தமிழ் கலசாரத்தின் படி சித்திரை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுவது மரபு.
திமுக அரசு தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டு என கூறிவருவது கண்டனத்துக்குரியது. தமிழ் மக்கள் இன்றளவும் தமிழ் புத்தாண்டை சித்திரை முதல் தேதி என்று தான் கொண்டாடி வருகின்றனர்.
வரும் 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனை நம்ப கூடாது என மக்கள் மத்தியில் நாங்கள் தெளிவாக கூறி வருகிறோம்.
கலியுகத்தில் 4 லட்சத்து 32 வருஷம் உள்ளது. தற்போது 5 ஆயிரத்து 110 ஆண்டுகள் தான் ஆகிறது.
தமிழகத்தில் என்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் சேர்க்கை துவக்கியுள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கவுன்சிலிங் சென்ற மாணவர்கள் முன்னுரி்மை கிடைக்கும்போது கட்டணம் மட்டுமின்றி பிற கட்டணம் வேண்டும் என கூறுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
சானியா மிர்சா இந்தியாவில் பயிற்சி பெற்று, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு 110 கோடி மக்கள் மத்தியில் இந்திய பெண்மணி என ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மணமகன் தான் தேவை என கூறினால் இந்தியாவில் இருந்து கிடைத்த பரிசு பொருட்கள், நிதிகள் ஆகியவற்றை திருப்பி தர வேண்டும்.
இல்லையெனில் அவரது திருமண நாளில் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications