சானியா திருமணம்: சோயப் குடும்பத்தார் ஹைதராபாத் வந்தனர்!
ஹைதராபாத்: சானியாவை திருமணம் செய்ய உள்ள சோயப் மாலிக்கின் குடும்பத்தினர் ஹைதராபாத் வந்து சேர்ந்தனர்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் திருமணம் ஹைதராபாத்தில் வரும் 15-ம் தேதி நடக்கிறது.
சோயப் மாலிக்கின் முதல் மனைவி ஆயிஷா, தன்னை விவாகரத்து செய்யாமல் சானியாவை திருமணம் செய்யக்கூடாது என்று போர்க்கொடி தூக்கினார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மாலிக் மீது மோசடி, வரதட்தணை கொடுமை உள்பட பல்வேறு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்தனர். அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர். இதனால் திருமணம் திட்டமிட்ட படி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
அதிர்ச்சியில் உறைந்த சோயப் மாலிக் ஆயிஷாவை விவாகரத்து செய்ய சம்மதம் தெரிவித்தார். இதன் மூலம் சானியா திருமணத்தில் நிலவி வந்த சிக்கல் தீர்ந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து சோயப் மாலிக்கின் குடும்பத்தார் நேற்று சானியா வீட்டுக்கு வந்தனர்.
சோயப் மாலிக்கின் தாயர் சுல்தானா ஃபரூக், சகோதரர் அதுல்மாலிக், சகோதரிகள் ஷாஸியா, சதாஃப் இம்ரான் ஆகியோர் சானியாவின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
திட்டமிட்டபடி திருமணம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடக்க உள்ளது.
திருமண வைபவத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications