3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது - 9 நிறுவனங்கள் பங்கேற்பு
டெல்லி: மூன்றாம் தலைமுறை மொபைல் சேவைகளை வழங்கும் 3ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது.
இந்திய மொபைல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான இந்த ஏலத்தின் மூலம், அரசுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இ-ஆக்ஷன்' எனப்படும் மின்னணு முறையில் இன்று காலை 9 மணிக்கு இந்த ஏலம் தொடங்கியது. தேசிய அளவில் 22 மண்டலங்களுக்கு ஏலம் நடக்கிறது.
ஏலத்தில் முன்வைக்கப்படும் 3 முதல் நான்கு ஸ்லாட்டுகளுக்கு ஏர்டெல்லின் பாரதி, வோடாபோன், டாடா, ரிலையன்ஸ், ஏர்செல், ஐடியா ஆகியவை உட்பட ஒன்பது நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
22 மண்டலங்கள் அனைத்திற்கும் அரசு தரப்பில் அடிப்படை விலையாக 3ஜி அலைவரிசைக்கு ரூ.3,500 கோடியும், பிராட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கு ரூ.1,750 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3ஜி அலைவரிசைக்கான ஏலம் அடுத்த மூன்று வாரங்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே சமயத்தில் எல்லா மண்டலங்களுக்கும் உயர்ந்தபட்ச விலை கேட்கப்படும் போது ஏலம் முடிவுக்கு வரும்.
அதுவரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7.30 வரை ஏலப்பணிகள் நடக்கும் என்று 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏல நடவடிக்கைகளுக்கான தலைவர் சஞ்சய் பாண்டார்கர் தெரிவித்தார்.
3ஜி ஏலம் முடிந்த பின்னர் இரண்டு நாட்கள் கழித்து பிராண்பேண்ட ஒயர்லெஸ் சேவைக்கான ஏலம் நடத்தப்படும்.
ஏலத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அகலக் கற்றை வழங்கப்படும். இந்தாண்டு ஆண்டு இறுதியில் 3ஜி மொபைல் சேவைகளின் வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications