‘அம்பாசடர்’ அமிதாப்பை புறக்கணித்த குஜராத் அரசு

சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் பிராண்ட் அம்பாசடராக செயல்பட விருப்பம் தெரிவித்தார் அமிதாப் பச்சன். இதை எதிர்பாராத குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அமிதாப்பின் விருப்பத்தை வரவேற்று அவரை பிராண்ட் அம்பாசடராக அறிவித்தார்.
இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் காட்டத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மும்பையில் நடந்த கடல்பால நிகழ்ச்சியில் அமிதாப்பும் கலந்து கொள்ளவே, கடுப்பாகிப் போன காங்கிரஸ் கட்சி மேலிடம், மகாராஷ்டிர முதல்வருக்கு கடுமையான டோஸ் விட்டது. இதைத் தொடர்ந்து அமிதாப்பை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்காமல் மகாராஷ்டிர காங்கிரஸ் கூட்டணி அரசு கவனமுடன் உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த பூமி நேர நிகழ்ச்சியில் அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன் புறக்கணிக்ப்பட்டார். அவரது போஸ்டர்கள உள்ளிட்டவை அகற்றப்பட்டது ஆடியோ உரையும் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல காமன்வெல்த் போட்டிகளுக்கான பிராண்ட் அம்பாசடராக அமிதாப்பை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான சுரேஷ் கல்மாடியும் நிராகரித்தது விட்டார்.
மோடியுடன் சேர்ந்த ஒரே காரணத்திற்காக அமிதாப்பை காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகிறது. இந்த நிலையில் மோடி அரசிடலிருந்தே அமிதாப்புக்கு ஆப்பு வைத்துள்ளனர்.
குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50வது ஆண்டு விழாவை அந்த மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதையொட்ட பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கலந்து கொள்ளவுள்ளார்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிராண்ட் அம்பாசடர் அமிதாப்பச்சனை அழைக்கவில்லை குஜராத் அரசு.
இதை அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் ரமன் வோரா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் ஜெயநாராயணன் வியாஸ் கூறுகையில், குஜராத் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எதிலும் அமிதாப் பச்சன் பங்கேற்கவில்லை. எனவே குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அவருக்கு அழைப்பு அனுப்பப்படாதது பெரிய விஷயமில்லை.
பிராண்ட் அம்பாசடராக செயல்பட விரும்புவதாக அமிதாப் பச்சன்தான் தெரிவித்தார். அதை அரசு ஏற்றுக் கொண்டது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications