இன்று இரவு நடைபெறுகிறது சானியா, சோயப் மாலிக் திருமணம்!

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஆகியோருக்கு இடையே ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த்து. இடையில் ஏகப்பட்ட கலாட்டாக்கள் ஏற்பட்டு சமீபத்தில்தான் அனைத்தும் சரியாகின.
இந்த நிலையில், திருமணத்திற்காக சோயப் மாலிக்கின் குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் வந்து சேர்ந்தனர். திருமண ஏற்பாடுகளும் களை கட்டியிருந்தன.
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திருமணம் நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு சானியா மிர்ஸாவின் வீட்டில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதாம். ஏப்ரல் 15ம் தேதி ஹோட்டல் தாஜ் கிருஷ்ணாவில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனராம்.
இதே ஹோட்டலில்தான் கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சானியாவுக்கும், சோரப் மிர்ஸாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தை காஜி அகமதுல்லா பாஷா நடத்தி வைக்கிறார்.
திருமணத்திற்காக சோயப்பின் தாயார் சுல்தானா பரூக், சகோதரர் அதில் மாலிக், சகோதரிகள் ஷாஸியா இம்ரான், சதாப் இம்ரான், உறவினர்கள் மமூன் இம்ரான், ஜைனப் இம்ரான் சோயப் ஆகியோர் ஹைதராபாத் வந்துள்ளனர்.
திருமணத்திற்குப் பின்னர் 2 நாட்கள் கழித்து சோயப், சானியா மிர்ஸா உள்ளிட்டோர் பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications