தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - வரதராஜன் குற்றச்சாட்டு
திண்டுக்கல்: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வரதராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
விலைவாசி உயர்வை கண்டித்து, மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் வரதராஜன் கலந்து கொண்டு பேசுகையில், 'விலைவாசி உயர்வு, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை கண்டித்து, மாநிலம் முழுவதும் 25 லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் கம்பெனிகளுக்கு ஆதரவாக, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும், குறிப்பிட்ட சிலரை திருப்திபடுத்த பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் கொலையான சம்பவமே இதற்கு ஒரு உதாரணமாக குறிபிப்பிடலாம்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போலி, காலாவதியான மருந்துகள் விற்பனை இந்த நிமிடம் வரை நீடித்த வண்ணம் உள்ளது.
இந்த பிரச்னையில் உண்மையான குற்றவாளிகள் குறித்து வெளிப்படையான விசாரணையை அரசு நடத்த முன் வர வேண்டும்.
இதற்கு துணையாக செயல்பட்டவர்கள் மீது பாராபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications