தஞ்சாவூர்: டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலையை எதிர்த்து மக்கள் போராட்டம்- தடியடி – பெரும் அமளி

ஒரத்தநாடு அருகே வடசேரி எனும் கிராமத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பாலுவுக்கு சொந்தமான எரிசாராய தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சம்பந்தம் இல்லாமல் ஊருக்குள் வெளியூர் கார்கள் நிறைய வந்தன. இதனால் மக்கள் ஆத்திரமடைந்தனர். அடியாட்களை அனுப்ப வைத்திருப்பதாக சந்தேகமடைந்த அவர்கள், அந்தக் கார்களில் வந்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி போராட்டத்தில் குதித்தனர்.
போலீஸாரிடமும் முறையிட்டனர். ஆனால் போலீஸார் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அந்தக் கார்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும், அங்கு வந்த கோட்டாட்சியர் கருணாகரனையும் பொதுமக்கள் தாக்கினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் சரமாரியாக பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.
நிலைமை தொடர்ந்து பதட்டமாக இருப்பதால் அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications