பொள்ளாச்சி செக் போஸ்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ 23,000 பறிமுதல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.23 ஆயிரத்து 970 கைப்பற்றப்பட்டது.
பொள்ளாச்சி வளந்தாயமரம் பகுதியில் வட்டார போக்குவரத்து செக்போஸ்ட் உள்ளது. இந்த செக் போஸ்டை தாண்டி தான் கேரளா செல்ல வேண்டும்.
இதனால் இந்த செக் போஸ்ட் வழியாக வரும் வாகனத்தை நிறுத்தி லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.
இதனையடுத்து இன்று காலை 6 மணி அளவில் கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சண்முக பிரியா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ.23ஆயிரத்து 970 கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் (51), உதவியாளர் கோயில்மணி (55) உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
லஞ்சம் வசூலிக்க தனிப்பட்ட முறையில் பஞ்சலிங்கம் என்ற 31 நபரை அதிகாரிகள் பணிக்கு அமர்த்தி இருந்ததும் தெரியவந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications