திராவிடக் கட்சிகளுடன் நாம் தமிழர் கூட்டணி அமைக்காது - சீமான் உறுதி
தஞ்சாவூர்: எக்காரணத்தைக் கொண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என 'நாம் தமி்ழர்' இயக்க ஒருங்கிணைப்பாளரும், சினிமா இயக்குனருமான சீமான் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இதுபற்றி நிருபர்களிடம் சீமான் கூறுகையில், 'நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் தமிழின எழுச்சி அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் நடைபெறுகிறது. இது தமிழர்களுக்கான அரசியல் கட்சி.
தேசியம், திராவிடம் என்ற பெயர்களில் தான் இது வரை தமிழகத்தில் கட்சிகள் உள்ளன. தமிழ் இனத்திற்கு என்று தனியாக ஒரு அரசியல் கட்சி இல்லை. அதனால் தமிழனுக்காக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இலங்கை கடல் படை அராஜரகத்தால் தினசரி பல நூறு தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வேதனையை அனுபவிக்கின்றனர். இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்காக, மத்திய,மாநில அரசுகள் எந்த முயற்சியும் செய்யவில்லை. இலங்கைக்கு எதிராக எச்சரிக்கை விடுக்க கூட மத்திய மாநில அரசுகள் முன் வரவில்லை.
இலங்கை அரசு போர்க் குற்றம் செய்துள்ளதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டுகின்றது. ஆனால், இந்தியா மெளனம் காக்கின்றது.
நாம் தமிழர் அரசியல் கட்சியின் கொடி அறிமுக விழா தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
நாங்கள் வசதியாக வாழ கட்சி துவங்கவில்லை. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். அப்படியொரு நிலை ஏற்பட்டால், கட்சியைக் கலைத்துவிட்டு திரைத்துறைக்குச் சென்று விடுவேன்.
தமிழின அமைப்புகள் விரும்பினால், அவர்களைத் தேர்தலில் சேர்த்துக் கொள்வோம்.
கட்சி துவங்கிய பின்பு ஊராகச் சென்று இளைஞர்களிடம் தமிழின உணர்வுகளைப் பரப்புவோம். அரசியல் வகுப்புகள் நடத்தி, இளைஞர்களை வழி நடத்துவோம்.
பெரியார், பூலித்தேவன், ரெட்டைமலை சீனிவாசன் போன்ற தமினத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களில் படிப்பகங்களைத் தொடங்குவோம்.
உடல் பயிற்சிக் கூடங்கள் அமைத்து, இளைஞர்களைத் தனித்திறன் மிக்கவர்களாக உருவாக்குவோம். மது, புகையிலை போன்ற தீயசெயல்களில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்போம்' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications