ராஜினாமா குறித்து பேச விரும்பவில்லை: அமைச்சர் ப.சிதம்பரம்
புதுச்சேரி: பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன் என்பது முடிந்துபோன விவகாரம். அதுபற்றி இனி பேச விரும்பவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சட்டீஸ்கரின் தாண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்கு 75 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முடிவெடுத்தார்.
ஆனால், சிதம்பரத்தின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் ஏற்க முடியாது எனக் கூறிவிட்டார்.
சிதம்பரம் இன்று புதுச்சேரி வந்திருந்த போது இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சிதம்பரம், 'நக்சல் தாக்குதலில் எனது தலைமையின் கீழ் இருந்த 75 வீரர்கள் உயரிழந்து விட்டனர்.
சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிர்கள் பறிபோனதற்கு உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்யலாமா என முடிவு செய்தேன்.
இதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தீர்க்கமாகவும் தெரிவித்தேன். ஆனால் அதை பிரதமர் ஏற்க மறுத்துவிட்டார்.
இப்போது அது முடிந்து போன விவகாரம். அதைப்பற்றி நான் மீண்டும் பேச விரும்பவில்லை.
நக்சல் தாக்குதலுக்கு நான் முழு பொறுப்பேற்றேன் என்பதற்காக, இதில் மாநில அரசுகளுக்கு எந்த விதமான பொறுப்பும் கிடையாது என்பது அர்த்தமில்லை.
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் மாநில அரசுகளுக்கும் பங்குண்டு. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். எல்லா மாநில அரசும் இதை ஒப்புக்கொண்டு தான் செயல்படுகிறார்கள் என நினைக்கிறேன்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications