விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Subscribe to Oneindia Tamil

பழனி: விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை கண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தான் வந்த காரில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். எனினும் வழியிலேயே அப்பெண் உயிரிழந்தார்.

பழனி அருகே தாசரிபட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள் (45). நேற்று காலை பழனியம்மாள் தனியார் டவுன் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார்.

சத்திரப்பட்டி பெரிய பாலம் என்ற இடத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய போது பழனியம்மாள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஏராளமான பேர் கூட்டமாக கூடினர்.

அந்த சமயத்தில், பழனியில் விபத்தில் இறந்த மதிமுக தொண்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திண்டுக்கல் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாலையோரம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து தனது டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னார்.

காரில் இருந்து இறங்கி கூட்டத்தை விலக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பழனியம்மாளை பார்த்தார். அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். அவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கூறி இருப்பதாகவும், ஆம்புலன்சுக்காக காத்திருப்பதாகவும் கூறினர்.

இதைத்தொடர்ந்து வைகோ அந்த பெண்ணை தொட்டுப் பார்த்தார். அந்த பெண்ணுக்கு உயிர் இருந்தது. உடல் அசைவும் இருந்தது. இதனால் வைகோ உடனடியாக தன்னுடன் தொண்டர்கள் வந்த காரில் பழனியம்மாளை ஏற்றி பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி அனுப்பி வைத்தார்.

சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் நிர்வாகிகளையும் உடன் அனுப்பி வைத்தார்.

இதன் பேரில் மதிமுக தொண்டர் அணியைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு போராடிய பழனியம்மாளை தங்கள் காரில் ஏற்றி வந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பழனியம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். பழனியம்மாள் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+