லாரி விபத்து - ரூ.1 கோடி மது, விசைத்தறி எந்திரம் தீயில் கருகி நாசம்
செங்கல்பட்டு: நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்து, அவற்றில் இருந்த மதுபாட்டில்கள், விசைத்தறி எந்திரங்கள் கருகி நாசமாயின. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என தெரிகிறது.
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு மதுபான நிறுவனத்தில் இருந்து பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி விழுப்புரம் டாஸ்மாக் குடோனுக்கு சென்று கொண்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு அந்த லாரி செங்கல்பட்டு அடுத்த பழவேலி ஆற்றங்கரை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென டயர் பழுதடைந்த்து. இதனால் லாரியை சாலையோரம் நிறுத்தி வைத்தனர்.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து விசைத்தறி எந்திரம் ஒன்றை ஏற்றிக் கொண்டு குமாரபாளையம் நோக்கி மற்றொரு லாரி சென்றது.
அப்போது, சாலையோரம் பழுதாகி நின்ற மதுபான லாரி மீது விசைத்தறி எந்திரத்தை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. மது பாட்டில்கள் வெடித்து சிதறின.
தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இரண்டு லாரிகளிலும் இருந்த மதுபான பாட்டில்கள், விசைத்தறி எந்திரம் ஆகியவை முற்றிலுமாக கருகி நாசமாயின. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications