சென்னை - சேலம் விமான சேவை இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே!

கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் தனியார் நிறுவனமான கிங்பிஷர் விமானங்களை இயக்கி வந்தது. தினசரி சேவையாக பகல் 2.50 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி 3.50க்கு சேலத்துக்கும், மீண்டும் மாலை 4.20க்கு கிளம்பி 5.20க்கு சென்னைக்கும் இந்த விமானங்கள் இயங்கின.
ஆரம்பத்தில் ஓரளவு கூட்டத்துடன் இயங்கிய விமானங்கள், போகப் போக 50 சதவிகிதம் கூட பணிகள் இல்லாமல், காலி இருக்கைகளுடன் பறக்க வேண்டி வந்தது.
இதனால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், சேலம் - சென்னை விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது கிங் பிஷர். இதனால் சேலம்வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காலி இருக்கை பயணம் தொடர்ந்தால் மேலும் ஒரு சர்வீஸைக் குறைக்கவும் கிங்பிஷர் திட்டமிட்டுள்ளது.
சென்னை - சேலம் மார்க்கத்தில் விமான சேவை கேட்டு நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்திருந்தனர் சேலம்வாசிகள். பெரும் தொழிலதிபர்களிடமிருந்து ஏகப்பட்ட பிரஷர் வேறு. ஆனால் விமான சேவை துவங்கிய பிறகு, அந்த தொழிலதிபர்களே இந்த விமான சேவையை உபயோகப்படுத்தவில்லை என்பது சேலம் விமானநிலைய அலுவலர்களின் கருத்து!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications