மோடி குறித்து நான் கூறியதை தவறாக சித்தரித்து விட்டனர் - கோவா முதல்வர்
பனாஜி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று கோவா முதல்வர் திகம்பர் காமத் கூறியுள்ளார்.
கோவா முதல்வர் திகம்பர் காமத், பாஜகவில் இருந்து கடந்த 2005ம் ஆண்டு விலகி காங்கிரஸில் சேர்ந்தவர்.
பாஜக பின்னணி கொண்ட காமத், டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தனது நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டு பேசினார்.
இதுதொடர்பான செய்திகளை படித்த கோவா காங்கிரசார், கடும் அதிருப்தி அடைந்தனர்.
காமத் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவா காங்கிரஸ் கட்சித் தலைவர் சுபாஷ் ஷிரோத்கர், கட்சித் தலைமைக்கு புகார் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக காமத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில முதல்வர்களுடனும் சுமுக உறவு வைத்துள்ளதாகவும், அந்த வகையில் நரேந்திர மோடியுடனும் நல்லுறவு இருப்பதாக காமத் தெரிவித்துள்ளார்.
மோடி பற்றி நான் பேசியதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு எனது விசுவாசம் குறைந்துவிடாது. காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற கொள்கை மற்றும் தாராளமய கொள்கைக்கு எவ்விதத்திலும் குந்தகம் விளைவிக்க மாட்டேன் என்று காமத் கூறியுள்ளார்.
இதற்கிடையே நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ள விருந்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications